ஒரே வரியில் SORRY சொல்வது நியாயமா - நயினார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அப்பாவி இளைஞரை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு, அவரது தாயாரிடம் ’சாரி’ என்று ஒரே வரியில் கேட்பது எந்த வகையில் நியாயம்? என முதலமைச்சருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை காவலர்கள் துடிக்க துடிக்க கொன்ற நிலையில், அவரது தாயாரிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ’சாரி’ என ஒரே வரியில் கூறுவது எந்த வகையில் நியாயமாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதலமைச்சரின் கடமை என்றும் கேட்டுள்ளார். ஒருவேளை முதலமைச்சர் மனம் உவந்து மன்னிப்பு கேட்கிறார் என்றால், திமுக ஆட்சிக்கு வந்தது முதல்  காவல்நிலையங்களிலும், காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குரிய வகையிலும் உயிரிழந்த 23 நபர்களின் பெற்றோரிடமும், மனைவி - மக்களிடமும், முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் ஃபோட்டோ-வீடியோ ஷூட் எப்பொழுது நடக்கும்? என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Night
Day