அஜித் மரண வழக்கு -சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோட்டு நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது, காவல்துறையினர் தாக்குதலால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கும், போலீஸாருக்கு துணை போகும் விளம்பர திமுக அரசை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தின் போது பேட்டி அளித்த மாணவர்கள், இளைஞரை படுகொலை செய்த காவலர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Night
Day