ஏழை பெண்ணுக்கு சொந்த ஆட்டோ வாங்கி கொடுத்த ஆளுநர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு புதிய ஆட்டோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

ஆளுநர் மாளிகையில் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தான் வாடகை ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறினார். இதனை கவனித்த ஆளுநர், அந்த பெண்ணின் கோரிக்கையை பரிசீலித்து தனது நிதியில் இருந்து புதிய ஆட்டோ வழங்க உத்தரவிட்டார். 

இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஆட்டோ ஓட்டுநர் அமலாவுக்கு புதிய ஆட்டோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

இதுகுறித்து பேசிய பெண் ஆட்டோ ஓட்டுநர், தனது கோரிக்கையை சாதாரணமாக கடந்து விடாமல், ஒரு ஆட்டோவுக்கு உரிமையாளராக்கி, தனது வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்துள்ளதாக கூறி ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.

Night
Day