எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி, காங்கிரஸில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவுவதாக அதிருப்தி வெளிப்படுப்படுத்தினார். இதனிடையே நேற்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இதனால் விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு விஜயதரணி கடிதம் எழுதியுள்ளார். 

Night
Day