உதகையில் கடும் உறைபனி - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை நகர் பகுதியில் குறைந்தபட்சமாக 0.5 டிகிரி வெப்பநிலை நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தலைக்குந்தா, குதிரை பந்தய மைதானம், தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உறைப்பனி காணப்படுகிறது. உறை பனியால் தலைக்குந்தா பகுதி மினி காஷ்மீரைப் போல் காட்சி அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சமவெளி பகுதிகளில் உள்ள புல் வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி படர்ந்து காட்சியளிக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உறை பனியை கைகளால் எடுத்து சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்கின்றனர். உறைப்பனி தாக்கம் காரணமாக உதகை நகரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0.5 டிகிரி செல்சியஸூம், தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் தொடர்ந்து மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால் கடுமையான குளிர் நிலவுகிறது.

Night
Day