உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரீல்ஸ் பார்த்த அதிகாரிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்  முகாமில் அதிகாரிகள் ரீல்ஸ் பார்த்து ரசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த முகாமில் பங்கேற்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோர்  பெயரளவுக்கு 4 பேருக்கு நலத்திட்ட அட்டையைக் கொடுத்து மீண்டும் வாங்கி வைத்துக் கொண்டனர். பொது மக்களுக்கு மனுக்கள் எழுத போதிய வசதி செய்து தரப்படாததால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் ஆபத்தான முறையில் சாலையோரம் நின்று தனி நபர்களிடம் பணம் கொடுத்து மனுக்கள் எழுதினர். அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் பெரும்பாலானோர் வராத நிலையில் வந்திருந்த ஒரு சில அரசு அதிகாரிகளும் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு நேரத்தை கழித்தது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

Night
Day