திருவாரூர் : மழை நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், உதயமார்த்தாண்டபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

உதயமார்த்தாண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்றிரவு பெய்த தொடர் கனமழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day