எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் உடல் நலக்குறைவால் காலமான நாகாலாந்து ஆளுநரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.
நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்த இல.கணேசன், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசன், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து இல.கணேசனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள பூங்கா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள இல.கணேசன் உடலுக்கு பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் இல கணேசன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது. இல கணேசனின் மறைவால் பாஜக சார்பில் நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல்லையில் இன்று நடைபெற இருந்த பாஜக பூத் கமிட்டி கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், இல கணேசன் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், தனது நீண்ட பொது வாழ்வில், மக்களின் நலனுக்காக பாடுபட்டார் எனவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் எனக்கூறியுள்ள குடியரசுத் தலைவர், அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.