எழுத்தின் அளவு: அ+ அ- அ
இலங்கை கடற்படையின் கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில், கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவந்த வழியாக வந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இதில், படகு முழுவதும் சேதமடைந்து கடலில் மூழ்கியதில், படகில் இருந்த 4 மீனவர்களும் நீரில் மூழ்கினர்.
இதில், மூன்று மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஒரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து உயிரிழந்த மீனவரின் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.