எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான் குளம் பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாத கிணற்றில் ஆன்மி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி வேனில் பயணித்த மோசஸ் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இன்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் பிரேத பரிசோதனை முடிந்து மோசஸ் உள்ளிட்ட ஐந்து பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து, 5 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு பின்னர் அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த சுமார் 50 அடி ஆழ கிணற்றில் இருந்து ஏற்கெனவே ஆம்னி வேன் மீட்கப்பட்ட நிலையில், கயிறு மூலம் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், கிணற்றிலிருந்து 45 சவரன் நகைகள் மற்றும் உடமைகளை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.