ஆந்திர முதலமைச்சராகும் சந்திரபாபு நாயுடுவுக்கு சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தெலுங்குதேசம் கட்சிக்‍கும், 4வது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திரு. சந்திரபாபு நாயுடுவுக்‍கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திரு.சந்திரபாபு நாயுடுவுக்‍கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

திரு.சந்திரபாபு நாயுடு, புரட்சித்தலைவி அம்மா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர் - எங்களுடன் எப்போதும் நல்ல நட்பு பாராட்டி வருபவர் - வலிகள் நிறைந்த பல போராட்டங்களை கடந்து, மக்களின் மனங்களை வென்றுள்ள திரு.சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் அடுத்த ஆட்சி அமைய இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது - இதன்மூலம் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு மேம்பட வாய்ப்பு உள்ளது என, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அன்பு சகோதரர் திரு.சந்திரபாபு நாயுடு, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும்,  நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்களுக்கு பல்லாண்டு காலம் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர்புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day