அறிவிக்கப்படாத அமைச்சரா எ.வ.வே.கம்பன் - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு பதிலாக அவரது மகன் எ.வ.வே.கம்பன் ஆய்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விரைந்து சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமை துறை சார்ந்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு சென்ற அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

விளம்பர திமுக ஆட்சியில் உள்ளாட்சி பிரதிநிதி, எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சர் என எந்த பதவியும் வகிக்காத அமைச்சரின் மகன் கம்பன்,  ஆட்சியர், எஸ்.பி., கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. விளம்பர திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத அமைச்சராக எ.வ.வே. கம்பன் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Night
Day