அரசு பேருந்தின் முன் பக்க டயர் கழண்டு விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், ராசிபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

varient
Night
Day