அரசுப் பேருந்தின் படிக்கட்டு கழன்று விழுந்ததால் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ஆவத்தி பாளையம் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புற படிக்கட்டு கழண்டு சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையத்தில் இருந்து ஈரோட்டிற்கு புறப்பட்ட அரசுப் பேருந்து ஆவத்தி பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புற படிகட்டு பகுதி கழண்டு கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். பேருந்து மிக மெதுவாக சென்ற நிலையில், கூட்ட நெரிசலால் படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனையடுத்து பேருந்தின் படிக்கட்டு மற்றும் கதவு பகுதி கயிறு மூலம் கட்டப்பட்டு பவானி போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏறி சென்றனர். விளம்பர திமுக அரசு பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்காமல் மக்களின் உயிருடன் விளையாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Night
Day