அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி - தட்டிக்கேட்ட வட்டாட்சியர்! மிரட்டிய திமுக பிரமுகர் 07-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் புத்தக திருவிழாவில் வட்டாட்சியரை மிரட்டிய திமுக பிரமுகருக்கு வருவாய் துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்... ஆளே இல்லாத டீக்கடையில் என்ன நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என வட்டாட்சியரிடம் வம்பிழுத்த திமுக பிரமுகர்கள் பற்றிய தொகுப்பை தற்போது காண்போம்...

நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிராக உள்ள வர்த்தக மையத்தில் புத்தகத் திருவிழா கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துவங்கியது....

இந்த புத்தக திருவிழாவில் திங்களன்று கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது...

இந்நிலையில், திமுகவின் அராஜக கும்பலை சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது...

இவ்விழாவில், திமுக பிரமுகர்கள் விஜிலா சத்யானந்த், பள்ளிக்கோட்டை செல்லதுரை ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், கருத்தரங்கிற்கான நேரம் நெருங்கியதால், புத்தகத் திருவிழாவிற்கு பொறுப்பு தாசில்தாராக பணியாற்றிய வட்டாட்சியர் செல்வம், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்..

அடுத்தது கருத்தரங்கம் இருக்கிறது என வட்டாட்சியர் செல்வம் கூறியதும், திடீரென ஆத்திரமடைந்த பள்ளிக்கோட்டை செல்லத்துரை, அரங்கில் இருந்த காலி நாற்காலிகளை பார்த்து ஆளே இல்லாத கடையில் வியாபாரம் பார்க்கிறீர்கள் என வட்டாட்சியரை கிண்டல் அடித்தார்...

அப்போது பள்ளிக்கோட்டை செல்லத்துரை அருகே நின்றிருந்த உடன்பிறப்பு ஒருவர், மூன்று நிமிடத்தில் நிகழ்ச்சியை எப்படி முடிக்க முடியும் என வட்டாட்சியரை வறுத்தெடுத்தார்...

திமுக உடன்பிறப்புகள் தகராறில் ஈடுபடுவதை கண்ட திமுக பிரமுகர் விஜிலா சத்யானந்த், நைசாக அங்கிருந்து ஜூட் விட்டார்... 

வட்டாட்சியர் செல்வத்தை திமுகவினர் மிரட்டிய விவகாரம் வெளியில் கசிய, வருவாய் துறை ஊழியர்கள் கொதித்தெழுந்தனர்...

திமுகவினரின் அராஜக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த வருவாய்த்துறையினர், அனுமதி இல்லாமல் கடையை விரித்த திமுக பிரமுகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விளம்பர அரசை வலியுறுத்தினர்...

Night
Day