அதிகளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் சிகிச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே அரசுப் பள்ளியில் அதிகளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

களக்காடு அருகே கீழ் பத்தையில் செயல்படும் வரும் அரசுப் பள்ளியில் மருத்துவக்குழுவினர் வருகை புரிந்து மாணவ- மாணவிகளை பரிசோதனை செய்து சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கி உள்ளனர். இதனையடுத்து இடைவேளையின் போது 7ம் வகுப்பைச் சேர்ந்த 4 மாணவர்கள் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  அதிகளவு மாத்திரை சாப்பிட்ட பின் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய 4 பேருக்கும் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து 2 பேர்  மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day