அஇஅதிமுக ஆட்சி அமைய ஒன்றிணைவோம் கழக தொண்டர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வலியுறுத்தியும், மூத்த தலைவர் செங்கோட்டையனை கழக பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தார். அதனை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஇஅதிமுக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்தநிலையில், சென்னையில், அஇஅதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை மற்றும் அண்ணாசாலை, போயஸ் கார்டன், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட பல இடங்களில் அஇஅதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அஇஅதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் அஇஅதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  ஆம்பூரில் பைபாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் வாணியம்பாடியில்  பேருந்து நிலையம், பஜார் சாலை, மேட்டுப்பாளையம் மேம்பாலம், கச்சேரி சாலை போன்ற பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும், 2026-ல் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக  முயற்சி எடுத்து வரும் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அச்சிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் அஇஅதிமுக ஆட்சி அமைய ஒன்றிணைவோம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.கே.புரம், அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு கால வெற்றி கனவை தொண்டர்கள் நிறைவேற்றுவோம் என்றும், தொண்டர்களின் ஆட்சி அமைய ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம் என்றும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 

இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தாய் சின்னம்மா, டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேற்ற ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம்... வெற்றி பெறுவோம்  என்றும்  2026-இல் தொண்டர்களின்  ஆட்சி அமைய வேண்டும் நல்லவர்களின் லட்சியம்! வெல்வது நிச்சயம் என்றும் நூற்றாண்டு கால கழக வெற்றி கனவை தொண்டர்கள் நிறைவேற்றுவோம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.


Night
Day