கழகம் வலிமைப் பெறுவதே எனது நோக்கம் - செங்கோட்டையன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கழக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.செங்கோட்டையன்,  உள்துறை அமைச்சருடனான சந்திப்பிற்கு பிறகு, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்ததாகவும், அவரிடம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு செல்லும் நேரத்தை ஏற்கனவே இருந்தது போலவே மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக முறையில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது என்று கூறிய செங்கோட்டையன், அஇஅதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம் என  தெரிவித்தார். 

Night
Day