நெல்லையில் பேராசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் சம்பளம் வழங்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பேராசிரியர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.எஸ்.ஐ. டயோசிசன் கீழ் செயல்படும் சாராள் தக்கர் கல்லூரியில் கடந்த 3 மாதங்களாக 100க்கும் விரிவுரையாளர்கள், 70க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தப் பயனும் அளிக்கவில்லை என்று பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Night
Day