'தந்தை விட்டுச்சென்ற மூச்சுக் காற்றைதான் ரசிகர்கள் உருவில் சுவாசித்து வருகிறோம்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது தந்தை விட்டுச்சென்ற மூச்சுக் காற்றைதான் ரசிகர்கள் உருவில் சுவாசித்து வருவதாக நடிகர் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


செவாலியர் சிவாஜி கணேசனின் 24வது நினைவு நாளை முன்னிட்டு அடையாறு நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, சிவாஜியின் மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மணி மண்டபத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபு, அவரது ரசிகர்களை எல்லாம் பார்க்கும் போது அவர் நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தோன்றுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Night
Day