"வினாத்தாள்கள் கசிவு - பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் இல்லை"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை மத்திய கல்வி அமைச்சகம் பராமரிக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உறுப்பினர் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார், போட்டித் தேர்வுகளை நாடு முழுவதும் பல்வேறு முகமைகள் நடத்தி வருவதாகவும், வினாத்தாள் கசிவு குறித்தோ அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்தோ எந்த ஒரு விவரங்களையும் மத்திய கல்வி அமைச்சகம் பராமரிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் பொது தேர்வுகளில் நியாயமற்ற வகையில் வெற்றி பெறுவதை தடுக்க போதுமான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் சுகந்தா மஜூம்தார் தெரிவித்தார்.

Night
Day