எழுத்தின் அளவு: அ+ அ- அ
மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்தநாளில் அவர்தம் நினைவை போற்றுவோம் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகனும், தினத்தந்தி, மாலைமலர் நாளிதழ்களின் உரிமையாளருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 90வது பிறந்தநாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ் பத்திரிகை உலகில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் - தினத்தந்தி நாளிதழ் மூலம் தமிழகத்தில் பாமரரும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் - மேலும், கல்வி, விளையாட்டு, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனைகள் படைத்தவர் - விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராக திறம்பட பணியாற்றியதையும் இந்நாளில் எண்ணி பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அன்னாரது பிறந்தநாளில் தமிழ் உலகுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளையும், சமூக சேவைகளையும் அவர்தம் நினைவில் போற்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.