தீயசக்தி திமுகவை அழித்து மோடியை மீண்டும் பிரதமராக்கவே பாஜகவுடன் கூட்டணி - டிடிவி தினகரன்

எழுத்தின் அளவு: அ+ அ-

தீய சக்தி திமுகவை வீழ்த்தி மீண்டும் மோடியை பிரதமராக்க, நிபந்தனையற்ற கூட்டணி உருவாகியிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். இரவு 11 மணிக்கு தொடங்கிய கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாந்த தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை பெற்று தரவே பாஜகவுடனான கூட்டணியில் இணைந்திருப்பதாக தெரிவித்தார். 

varient
Night
Day