வயதான தோற்றத்துடன் வெளியாகியுள்ள புகைப்படம் உண்மையானதல்ல

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது வயதான தோற்றத்துடன் வெளியாகியுள்ள புகைப்படம் உண்மையானதல்ல என பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனம் கவர்ந்த நடிகரான ஜாக்கிசானுக்கு தற்போது 70 வயதாகும் நிலையில் அண்மையில் அவர் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதனைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் கவலையுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஜாக்கிசான், தயவு செய்து யாரும் வருத்தப்பட வேண்டாம்  என்றும் அந்த புகைப்படம் ஒரு படத்திற்காக போடப்பட்ட வேடம் எனக் கூறியுள்ளார். மேலும் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள நிலையில் அதில் அவர் இளமையாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day