மறைந்த மூத்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மூத்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு அவரது மகள் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் ராஜேஷ் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான மூத்த நடிகர் ராஜேஷ், சென்னையில் உடல்நலக் குறைவால் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார். ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் கனடாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நள்ளிரவு சென்னை வந்த அவரது மகள் திவ்யா, ராமாபுரத்தில் உள்ள தனது தந்தை ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதனையடுத்து, இன்று பிற்பகல் அசோக் நகரில் உள்ள தேவாலயத்தில் ராஜேஷ் உடல் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு இறுதி திருப்பலி நடைபெற உள்ளது. தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவர் கட்டி வைத்துள்ள கல்லறையில் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

varient
Night
Day