பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

கான்பூரை சேர்ந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மாடலிங் துறையில் நுழைந்த பிறகு திரைத்துறைக்கு அறிமுகமானார். இவருக்கு வயது 32. இந்நிலையில் பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவருடைய மேலாளர், இந்த காலை எங்களுக்கு மிகவும் கடினமானது என்றும், அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். இவரது மறைவு பாலிவுட் திரையுலக வட்டாரத்தை அதிர்ச்சி அடையே செய்துள்ளது.

Night
Day