சிவகங்கை கோர விபத்து - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இதுவரை 9 பெண்கள் உள்பட 11 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் தான் தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி 8 நபர்கள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் தற்போது திருப்பத்தூரில் அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 11 நபர்களின் உயிர்கள் பறிபோயிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க திமுக தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டதாகவும், தமிழகத்தில் பேருந்து ஓட்டுனர்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்டறிய திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், தமிழகத்தில் அரசு பேருந்துகள் முற்றிலும் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி உள்ள சின்னம்மா, இந்த விளம்பர ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி உள்ளார். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

இந்த விபத்தில் உயிரிழந்து இருப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day