சினிமா
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் காலமானார்
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...
அடிதடி வெட்டுக்குத்துனு, ஒரு பக்காவான ஆக்சன் டிராமா படமா உருவாகி இருக்கும் என்கின்ற நம்பிக்கைய கொடுத்து இருக்கு மெட்ராஸ்காரன் படத்தோட டீசர். மலையாளத்தில் கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க், கொரோனா பேப்பர்ஸ், ஆர்.டி.எக்ஸ் படங்கள் மூலமா புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகாம், இப்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார். கடந்தாண்டு வெளியான ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், ’மெட்ராஸ்காரன்’ புது படத்தில் ஷேன் நிகாம் நடித்திருக்கார். அவர் உடன் இணைந்து கலையரசன், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா இன்னும் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ்காரன் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . த்ரில்லர் ட்ராமாவா உருவாகியிள்ள இந்த படத்தின் டீசர் பார்க்கும் போதே ஒரு பக்காவான ஆக்சன் படமாக வந்து இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஜாதி வெறியில் ஒருத்தன், தன் மகனை இழந்த கோவத்துல் ஒருத்தன் என்று ஹீரோவை பழிவாங்க துடிக்கிறார்கள். சாவுக்கு பயந்து ஓடும் ஹீரோ ஒரு கட்டத்தில் லைஃபை தொலைத்த இடத்திலேயே தேட போகிறேன் என்று சொல்லி எதிர்த்து நிற்கிற மாதிரி டீசரையே சூப்பராக கட் பண்ணியிருக்கிறார்கள் மூவி டீம். டீசரை வைத்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் ஒரு சூப்பரான ஆக்சன் எண்டர்டெய்னர் காத்திட்டுருக்கு என்று சொல்லலாம்.
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவர...