தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவரது 50 ஆவது படமான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டது. அதன் படி, 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது.

Night
Day