கேரவன்களில் ரகசிய கேமரா - ராதிகாவிடம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

 நடிகைகள் கேரவன்களில் ரகசிய கேமரா வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டிய நடிகை ராதிகாவிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் சுரண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை வெளிக்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து சில நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் அளித்த பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மலையாள திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் கேரவன்களில் ரகசிய கேமரா இருப்பதாக தன்னிடம் கூறியதாக சில நாட்களுக்கு முன்பு நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் ராதிகா சரத்குமாரை தொடர்பு கொண்ட கேரள சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day