"தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் காட்சிகளுக்காக 'கிங்டம்' படத்தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சித்தாரா என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங்டம் படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கேள்விப்பட்டோம் என்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்றும் கூறியுள்ளது. இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துவதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Night
Day