க்ரைம்
"காதலித்து கரம்பிடித்த மனைவி" - உருட்டுக்கட்டையால் அடித்தே கொலை செய்த கொடூர கணவன்...
தெலங்கானா மாநிலத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை உருட்டுக்கட்டையால?...
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற காவலர் கைது செய்யப்பட்டார். எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவல்துறையினருக்கான குடியிருப்பில், காவலர் ஒருவரின் மனைவி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மற்றொரு காவலர் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவலர் பிரபாகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபாகரன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருச்சியில் இருந்து பணி மாறுதலாகி பெரம்பலூருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநிலத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை உருட்டுக்கட்டையால?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...