பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர் சிறையிலடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநின்றவூர் நாகாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் முருகன். இவரின் வீட்டில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி மர்ம நபர்கள் 40 சவரன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆவடி காந்திநகரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 15 சவரன் தங்க நகை மற்றும் 65 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

varient
Night
Day