நெல்லை - அரசுப் பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு விரைவு சொகுசு பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்து, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றது. அப்போது பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்தபோது, துப்பாக்கி மற்றும் அரிவாள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணிமனைக்கு சென்ற காவலர்கள் பேருந்தில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட இருக்கையில் மிதுன் காந்த் என்பவர் பயணித்ததாக தெரியவந்ததையடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போவில்பட்டிக்கு காவலர்கள் விரைந்துள்ளனர். 

varient
Night
Day