நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம் - தடயங்கள் கண்டெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மர்ம மரணம் அடைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்த கேபிகே ஜெயக்குமார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கேபிகே ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஜெயக்குமார் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், திசையவிளை அருகே கரைசுத்து புதூர் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

முன்னதாக கடந்த மாதம் 30ம் தேதி ஜெயக்குமார் தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டுக் கொண்டு இருப்பதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் குறிப்பிட்டு மாவட்ட எஸ்.பி.க்கு ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன்றனர். 

கே.பி.கே. ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டார். ஜெயக்குமாரின் மூத்த சகோதரா் கே.பி.கே. செல்வராஜிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே கே.பி.கே. ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்து பிளேடுகள் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கைரேகை நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர். மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அவரது ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் போலீசார் மீட்டுள்ளனர். 

இதனிடையே கே.பி.கே. ஜெயக்குமாரின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.




varient
Night
Day