ஜெகபர் அலி கொலை வழக்கு அதிகாரிகளை விசாரிக்கத் திட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிகாரிகளை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

கொலை சம்பவம் நடைபெற்ற போது திருமயம் வட்டாட்சியராக இருந்த புவியரசன், காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோருக்கும், அதேபோல் வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் கொடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமயம் பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கடந்த ஜனவரி 17ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day