க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
சேலம் மாவட்டம் பெரமனூர் அருகே 40 வயது பெண் அடித்து தண்ணீரில் மூழ்கடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மனைவி சுகுணாவள்ளி. இவரது கணவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் முருகேசனை தொடர்பு கொண்டு வீட்டினுள் ஏதோ கூச்சல் சத்தம் கேட்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற முருகேசன், தண்ணீர் தொட்டியில் மனைவியின் தலை மூழ்கியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், கணவர் முருகேசன் மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். திருமணத்தை மீறிய உறவால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...