சாராய விற்பனையை தட்டிக் கேட்ட 2 இளைஞர்களை படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது -பாஜக மாநில தலைவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட 2 இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 


இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருப்பது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா என்றும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே என்றும் விமர்சித்துள்ளார்.  

varient
Night
Day