ஏ.டி.ஏம்மில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட பணம் கொள்ளை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கலில் ஏ.டி.எம்., மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தேனியை சேர்ந்த நாகஅர்ஜுன் என்பவர் தனியார் ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளியன்று ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டதாக ஏஜென்சி உரிமையாளர் முருகனிடம் நாகஅர்ஜுனன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாகஅர்ஜுனனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது நண்பர்களை வைத்து கொள்ளை சம்பவத்தை நாகஅர்ஜுனன் அரங்கேற்றியது தெரியவந்தது. பின்னர் 4 பேரை கைது செய்த போலீசார், தற்போது மேலும் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day