இயக்குநர் அமீர்க்கு ஜாமீன் வழங்க ED மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தி சட்ட விரோதப் பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இருவருக்‍கும் ஜாமீன் வழங்க கோரிய வழக்‍கில் அமலாக்‍கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

varient
Night
Day