பிரேசிலில் கனமழை, வெள்ளப் பெருக்கு - 23 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நட்டின் தெற்கு மாகாணங்களான ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ சாண்டோவில் கடந்த வெள்ளி கிழமையிலிருந்து தொடர்ந்து பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வீடுகளை சூழ்ந்தது. மேலும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை கயிறுகள் மற்றும் படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடரும் கனமழையால், ரியோ டி ஜெனிரோவில் 15 பேரும் எஸ்பிரிட்டோ சாண்டோவில் 8 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் 5 ஆயிரம் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியதாக சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. 

varient
Night
Day