உலகம்
அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு..!...
பிரேசில் நாட்டில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்...
பாலஸ்தீனத்தின் ரபா நகர் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கு வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறிய இஸ்ரேல், காசாவின் வடக்கு பகுதி முழுவதையும் வசப்படுத்தியது. இதனால் வட பகுதியில் வாழும் மக்கள் தெற்கிலுள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் ரபா நகரில் தாக்குதலை விரிவுபடுத்தி ரபா நகரையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தொடுத்து வருகிறது. சண்டையை நிறுத்துவதற்காக பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரபா மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிரேசில் நாட்டில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...