பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் இயற்றியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் அவற்றை தடுக்க மடகாஸ்கர் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் நேற்று மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை அந்நாட்டின் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் நடைமுறைப்படுத்த மடகாஸ்கர் அரசு திட்டமிட்டுள்ளது. 

Night
Day