உலகம்
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற குஜராத் இளைஞர் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்ப்பு...
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்டு இதுவரை 26 இந்தி?...
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் பதவிக்கு மட்டும் அல்ல, ஓட்டுநர் உரிமம் கூட பெறத் தகுதியற்றவர் என்று நிக்கி ஹாலே கடுமையாக விமர்சித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், தென் கரோலினா மாகாண முன்னாள் ஆளுநரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தெற்கு கரோலினாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், நிக்கி ஹாலேயின் கணவர் எங்கே சென்று விட்டார் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு கூட்டத்தில் பேசிய நிக்கி ஹாலே, ராணுவத்தில் பணியாற்றும் தனது கணவர் மைக்கேலின் பணியை கண்டு தாம் பெருமைப்படுவதாகவும், ராணுவ வீரரை கிண்டல் செய்யும் ட்ரம்ப், ஓட்டுநர் உரிமம் கூட பெறத் தகுதியற்றவர் என்று விமர்சித்தார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்டு இதுவரை 26 இந்தி?...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலை?...