நேபாளத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 12 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாளத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். பாங்கேயின் நேபாள்கஞ்சில் இருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ரப்தி பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பீகாரை சேர்ந்த யோகேந்திரராம் என்றும் மற்றொருவர்  உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day