தாய்லாந்தில் 1.5 கோடி டன் லித்தியம் கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்து நாட்டில் ஒன்றரை கோடி டன் லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மின்சார வாகன உற்பத்தியில் சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும் என தாய்லாந்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை தொடர்ந்து லித்தியம் படிமங்கள் அதிகம் கொண்ட நாடாக தாய்லாந்து விளங்குகிறது. எனினும் இந்த ஒன்றரை கோடி டன் லித்தியம் படிமங்களை எப்படி வணிக நோக்கில் தாய்லாந்து பயன்படுத்தப்போகிறது என்ற பலத்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. சமீபத்தில் தான் லித்தியம் வெட்டி எடுத்துக்கொள்ள அர்ஜெண்டினாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day