சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிங்கப்பூரில் பிரபல AEM செமிகண்டக்டர் துறையில், மனிதவள திறன் சார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வும் ஒப்பந்தம் பிரதமர் மோடி தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.

புருனே பயணத்தை தொடர்ந்து நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அதிபர் தர்மான் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங்க் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பிரபல AEM செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அதன்படி, செமி கண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

varient
Night
Day