குவைத் சென்றடைந்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்

எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் நிலைமை குறித்து கண்காணிக்க பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் சென்றார். தொடர்ந்து, அங்குள்ள ஜாபர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து, குவைத் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி உயிரிழந்த, இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Night
Day