கனடாவில் வீட்டில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட இந்திய வம்சாவளியினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 3 பேர் வீட்டில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ மாகாணத்தில் இந்தியா வம்சவளியை சேர்ந்த ராஜீவ் வாரிகோ - ஷில்பா கோத்தா தம்பதியினர் தனது மகள் மகேக் வாரிகாவுடன் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் மர்மமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day