இஸ்ரேல் - ஈரான் விவகாரம் : அமெரிக்காவுக்கு ரஷ்யா அச்சுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. 

இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், அமெரிக்காவின் ஊக, கற்பனையான விருப்பங்களை தாங்கள் கடுமையாக எச்சரிப்பதாக தெரிவித்தார். மேலும், இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலுடன் அமெரிக்கா இணையலாம் அல்லது இணையாமல் போகலாம் என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு உலக தலைவர்களிடம் இருந்து தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 

Night
Day